சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பாகனேரி சிவன் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிவபெருமானுக்கு நடைபெற்றது.
நேற்று முன்தினம் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமி திருவீதி உலா கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.