Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… 16 வகை திரவியங்களால் அபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதில் கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் 16 வகையான திரவியங்களால் செய்யப்பட்டது. அதேபோல் காளையார் கோவிலில் உள்ள சொர்ண காளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அலங்கார பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலக நாயகி சமேத நாகநாத சுவாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்று. அதன் பின் சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு உள் மண்டப பிரகாரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |