பலன் தரும் 5 முத்திரைகள் – மன அழுத்தத்தை குறைக்க எளிய வழி “முத்திரை {முத்ரா}” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செயற்கையாகவும் கூறப்படுகிறது பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு பின்வரும் 5 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன :
1. ஞான் முத்ரா :
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டைவிரல் நுனியை தொடவும் மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனியில் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டு விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை,உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றல் அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.
2. பிராண முத்ரா :
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றாற்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நிங்கும். சோர்வு நிங்கும். கண்பார்வை சிறப்பாகும்.
3. ப்ரித்வி முத்ரா :
மோதிர விரல் நுனி கொண்டு கட்டைவிரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூட்டி பளபளப்பாக்கும். உடலைசுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
4. வாயு முத்ரா :
ஆள்காட்டி விரலை கட்டை விரல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயு தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு , கீல்வாதம், பாரிச வாயு கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கம்.
5. சூர்யா முத்ரா :
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராவை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.