Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்று…. 10 ஏக்கர் கரும்புகள் நாசம்…. வேதனையில் விவசாயிகள்…!!

10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்புரம், மல்லன்குழி, கரளவாடி ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் என மழை பெய்துள்ளது. அதன் பின்னர் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதியில் இருக்கும் ஐந்து தோட்டங்களில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிரிட்டோம். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்று வீசியதால் கரும்பு பயிர் சாய்ந்துவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |