திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். அதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் கிஷோர் என்பவர் என்னை போல மாற்றுத்திறனாளி தான். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஒரு நாள் நான் தனிமையில் இருக்கும் போது அருண் கிஷோர் எனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நாம் தான் திருமணம் செய்து கொள்ள போகிறோமே, நமக்குள் எதற்கு இடைவெளி என்று கூறி அருண் கிஷோர் வற்புறுத்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதேபோல் அருண் கிஷோர் பல முறை என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டார். இதனை அடுத்து என்னுடன் பேசுவதை நிறுத்தி கொண்ட அருண் கிஷோர் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் அருண் கிஷோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.