லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிகுண்டுகளை பயன்படுத்தி பாறை கற்களை உடைக்கின்றனர். இதனால் கல் குவாரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் மற்றும் விலை நிலங்களில் விரிசல் ஏற்படுகிறது. எனவே கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அவ்வழியாக அதிக பாறை கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.