Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் பாவத்தை சம்பாதித்து விட்டேன்”… அதான் எனக்கு இப்படியெல்லாம் நடக்குதோ?…. வேணு அரவிந்த் ஸ்பீச்…..!!!!

காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணிராணி, சந்திரகுமாரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து குணமடைந்த சில நாட்களிலேயே அவருக்கு  நிமோனியா வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் காரணமாக வேணு அரவிந்த் கோமாவிற்கு சென்று விட்டதாக பல்வேறு செய்திகள் வந்தது.

இதற்கிடையில் சில  பிரபலங்கள் அது வெறும் வதந்தி, வேணு நன்றாக இருக்கிறார் என கூறிவந்தனர். இந்நிலையில் வேணு அரவிந்த் கூறியதாவது “நான் தற்போது உயிரோடு தான் உள்ளேன். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். எனக்கு தலையில் சின்ன கட்டி ஒன்று இருந்தது. அதை தற்போது நீக்கிவிட்டனர். ஆகவே இப்போது நான் நலமாக இருக்கிறேன். நான் வில்லனாக அதிகம் நடித்து பல பேரின் பாவத்தை சம்பாதித்ததனால் தான் எனக்கு இப்படி நடக்கிறதோ என நினைத்ததாக” அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |