கிழக்கு உக்ரைனின் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 4 சிறுவர்கள் உட்பட 39 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 87 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற அந்த ரயில் நிலையத்திற்கு நடுவில் உள்ள பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய ராணுவம் பழி தீர்க்கும் நோக்கில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஏவுகணையில் பொறிக்கப்பட்டிருந்த வசனம் தற்போது உக்ரைன் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.
அந்த ஏவுகணையில் “எங்கள் பிள்ளைகளுக்காக..!” என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. ரஷ்ய ராணுவ வீரர்களின் மூலம் மூளையை சலவை செய்து அவர்களை உக்ரைனுக்கு எதிராக தூண்டி விடுவதற்காகவே இதுபோன்ற சில வேலைகளில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற போது 4000 மக்கள் குவிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.