Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்…. 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் பட்டுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சசிகலாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வினோத் கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை தனியாக பேச அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் தலைமறைவான வினோத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மேலும் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து கொண்டிருந்த வினோத்தை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |