Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி….. வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை….. அதிரடி தீர்ப்பு….!!!

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த வழக்கில் வட மாநில வாலிபருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகே 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். மறுநாள் அப்பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம்அலி(21) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மஜம்அலியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |