Categories
மாநில செய்திகள்

பலாத்காரம் செய்த காவலர்….. நாசமான 15 வருட வாழ்க்கை….. ஏமாந்து நிற்கும் பெண்….!!

தமிழகத்தில் பாலியல் வழக்கில் 15 வருடமாக காத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தை நாடி செல்கின்றனர். ஆனால் அங்கு நடப்பது என்னவோ வேறு. பாலியல் குற்றங்களுக்கு சரியான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்குவதில்லை. அதனால் பெண்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் 2005ஆம் ஆண்டு நடந்தது. 2005 ஆம் ஆண்டில் வேலூர் ஆயுதப்படை காவலர் ஒருவர், 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. ஏமாற்றியது மட்டுமே நிரூபணமாகியுள்ளது என இந்த வழக்கு 15 வருடம் கழித்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வருடங்கள் காத்திருந்து ஒரு பெண்ணின் வாழ்க்கை தற்போது பறிபோயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடைகளுக்கு மேல் பெண்களைத் தொட்டால் அது பாலியல் குற்றம் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தை நாடி செல்லும் பெண்களுக்கு இது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்குவதால், நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெண்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |