Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பலாத்காரம் செய்ய முயன்ற மாமா குத்தி கொலை… இளம்பெண்ணின் துணிச்சல்…!!!

சோழவரம் அருகே கத்தியைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தனது மாமாவை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே 19 வயது இளம் பெண்ணை கத்தியை காட்டி அவரின் மாமா அஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் அதே கத்தியை பிடுங்கி அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்தப் பெண் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளவே கொலை செய்ததால், அவரை சிறையில் அடைக்காமல் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |