Categories
சினிமா தமிழ் சினிமா

பலாத்காரம் – பிரபல “நாகினி” சீரியல் நடிகர் கைது – பரபரப்பு…!!!

இந்தி சீரியல் தமிழில் நாகினி என டப்பிங் செய்யப்பட்டு பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பானது. இது நல்ல ஹிட்டானதால் நாகினி 2, நாகினி 3 என அடுத்தடுத்தப் பாகங்களை டப்பிங் செய்து வெளியிடடபட்டுக்கொண்டிருக்கிறது.  இந்த சீரியலின் ஹீரோவாக பேர்ல் வி புரி நடித்துள்ளார். இவர் இதில் அப்பாவியான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி வாணி( பெயர் மாற்றம்) என்ற பெண்ணை ஏமாற்றி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று சாமுராய் படத்தில் நடித்த நடிகை அனிதா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |