Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பலாப்பழ அல்வா… டபுள் இனிப்பு சுவையில்…!!!

பலாப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பலாப்பழம்                     – 25
நெய்                                  – 100 கிராம்
முந்திரி                            – 10
ஏலக்காய்த் தூள்         – 6
திராட்சை                       – 10
சர்க்கரை                         – 250 கிராம்
பச்சரிசி மாவு                – 1/4 கப்
சோள மாவு                    – 2 டீஸ்பூன்
பால்                                    – 1/4 லிட்டர்
உப்பு                                    – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பலாபழத்தை போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து, நன்கு  பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து  அரிசி மாவு, சோள மாவு எடுத்து  தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு,  கிண்ணத்தில்  சோள மாவு, அரிசி மாவு மற்றும்  பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் நெய் விட்டு, கலந்து வைத்துள்ள பால் கலவை சேர்த்து நன்றாக 15 நிமிடம் பொறுமையாகக் கிளறி கொள்ளவும்.

பிறகு கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து வைத்துள்ள பலா சுளையை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கிளறவும். பின்னர் தேவையான சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

பிறகு ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். இறுதியில் வறுத்து  வைத்துள்ள முந்திரி, திராட்சை போட்டு பரிமாறினால் சுவையான பலாப்பழ அல்வா ரெடி.

Categories

Tech |