நாடுகளும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியதால் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அவற்றை மார்ச் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கொரோனா நிலைமையை சமாளிக்க நோய்த் தொற்றைத் தடுக்கவும் இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.