Categories
உலக செய்திகள்

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை… இதுதான் காரணமா…? ஆப்கானிஸ்தான் மந்திரி விளக்கம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.

மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிகின்றார்கள் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து சில அறிவியல் படிப்புகள் பெண்களுக்கு உகந்ததாக இல்லை என குறிப்பிட்ட அவர் பொறியியல் உள்ளிட்ட சில படிப்புகள் மாணவிகளின் கண்ணியம் மற்றும் ஆப்கானிய கலாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆண்களின் துணை இல்லாமல் சில பெண்கள் தனியாக பயணம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |