சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி வருகிற ஜனவரி மாதம் 9, 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும்150-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரதீப் 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.