Categories
மாநில செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்….. ஆளுநரின் திடீர் உத்தரவு…..!!!

திருநெல்வேலி மனோன்மணியம், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு புதிய வேந்தர்களை நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அழகப்பா பல்கலைக்கழக ஜீ.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில் ஆளுநரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் ஆளுநர் தற்போது துணைவேந்தர்கள் நியமித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை போல கேரளாவிலும் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கக்கூடிய வகையில் சிறப்பு சட்டம் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கு ஆளும் கட்சிக்கும் அதிகாரம் மோதல் நிலவி வருகிறது. இதனாலையே ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வண்ணமாக சில மாநில கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர். மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு தான் துணை வேந்தர்கள் நியமிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆளுநரின் அதிகார ஓங்கி இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக ஆளுநரை இந்த துணைவேந்தர்கள் நியமனம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |