பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரவிதாக வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்து அந்த மாணவிகள் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவுக்குபின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது ஆபாச வீடியோவை இமாச்சல பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவியும், அந்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளி என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு மாணவிகள் ஆபாசமாக படம் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதுமட்டுமில்லாமல் கல்லூரிக்கு வருகின்ற 24-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியா மேற்பார்வையில் 3 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது கடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில போலிஸ் டிஜிபி கரூர் யாதவ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீடியோக்களை எடுத்து தங்களிடம் பகிர வேண்டும் என்று அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்த மாணவி மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சன்னி மேத்தா மற்றும் அவரது நண்பர் ரங்கராஜ் வர்மா ஆகியோர் மற்ற மாணவிகள் குளிக்கும் வீடியோ எடுத்து தர வேண்டும் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். அப்படி இல்லையென்றால் தங்களிடம் உள்ள அந்த மாணவியின் அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் பிளாக்மெயில் செய்ததாக தெரிகிறது.