தமிழகத்தில் 13 அரசு பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இருக்கிறார். இவர் தான் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பார். துணை வேந்தர்களை தேர்வு செய்யும் போது செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒருவர் என மொத்தம் 3 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான நடைமுறையையும், துணைவேந்தரை மாநில அரசே நீக்கம் செய்யும் நடைமுறையையும் கொண்டு வருவதற் காககாவும் 2 மசோதாக்கள் சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானம் மேற்குவங்கம் மற்றும் கேரளாவிலும் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பான மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி கூறியதாவது, தமிழகம் மனிதவள மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறந்த மனிதர். யுஜிசி விதிகளின்படி பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வரை நியமிக்க முடியாது. எனவே அரசியல் சாசனப்படி ஆலோசனைகளை பெற வேண்டி இருக்கிறது. பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்கு நான் முக்கியத்துவம் தருகிறேன். மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இயக்கம் என்னுடைய அனுபவத்தில் மிகவும் ஆபத்தான இயக்கம் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன் என்றார்.