Categories
அரசியல்

பல்டி அடித்த அண்ணாமலை…. தமிழக அரசிற்கு 100 மார்க்…. என்னவா இருக்கும்?…!!!!

முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு இந்திய ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 100-க்கு 100 மார்க் கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவத்தின் போது, மீட்பு பணியில் தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர். அரசியலுக்காக பாஜக யார் மீதும் குற்றம் சுமத்ததாது. துரிதமாக செயல்பட்டு பணியை செய்துள்ளனர்.

உயிரை கூட பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். இதற்காகவே அவர்களுக்கு 100-க்கு 100 மார்க் அளிக்கவேண்டும். முதல்வர் தொடங்கி கடைசி மனிதன் வரை 3 நாட்களுக்கு செய்த மீட்பு பணி மூலம் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த சம்பவத்தில் தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம் என்று அவர் கூறியுள்ளார். இருந்தாலும் கூட, அண்ணாமலை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறாக பேசிய மாரிதாஸ் என்பவரை தமிழக காவல்துறை கைது செய்த போது, கருத்து சுதந்திரம் பறி போவதாக அண்ணாமலை கடுமையாக குற்றம் சாட்டினார். இதையடுத்து தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ராணுவ மூத்த அதிகாரிகள் பாராட்டு தெரிவிக்கும் சூழலில் தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது. அகில இந்திய பாஜகவும் அந்த விஷயத்தில் அமைதியாகவே இருந்தது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து விவகாரத்தில் தமிழக அரசுக்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |