மகராஷ்டிரா மாநிலம் செல்சூரா அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் உட்பட 7 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு விபத்தில் இறந்தவர்கள் வர்தாவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் இறந்த அனைவரும் வர்தாவில் இருக்கும் சாவங்கி மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.