Categories
மாநில செய்திகள்

பல்லவன், வைகை ரயில்கள் திடீர் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26ஆம் தேதி அதிகாலை 5:05 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்பட வேண்டிய வைகை சூப்பர் பாஸ்ட் ரயில் 26ஆம் தேதி, எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மதியம் 2:40 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து மதுரைக்கு புறப்படும்.

புதுச்சேரியிலிருந்து சென்னை எழும்பூர் வழியே புது டில்லிக்கு 26ஆம் தேதி காலை 9:50க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மாற்று வழியில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் பெரம்பூருக்கு மதியம் 2:20 மணியளவில் வந்து 2:25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், பெரம்பூரில் இருந்து பயணம் செய்யலாம்.

Categories

Tech |