கடவுள் மனிதர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காக சில வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பல்லி. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தில் பல்லியின் உருவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். முன்னொரு காலத்தில் நமது வீட்டில் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது நல்லது, கெட்டது என்று பல்லி எச்சரிக்கும். நமது சாஸ்திரங்களை ஒன்றாக கூறப்படுவது பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நம் உடலில் எந்த பாகங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை கூட சாஸ்திரங்கள் கணித்துள்ளனர்.
நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் என்றும் செய்தியாளர் என்றும் கூறப்படுகிறது. ஒரு சில கோயில்களில் பல்லி உருவங்கள் வைக்கப்பட்டு, அது வணங்கப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் மேற்கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் இந்தப் பல்லி உருவம் இடம் பெற்றுள்ளது. இதை மக்கள் தொட்டு வணங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட பல்லிகள் நம் வீட்டில் இருக்கும் பொழுது அதை நாம் ஒரு உயிரினமாக மதிக்க வேண்டும். அவற்றை கொல்லக் கூடாது. அது நமக்கு தீங்கை அளிக்கும்.