பல்லி விழுந்த சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி அருகே இருக்கும் மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் விடுமுறையில் இருக்கின்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதிய உணவை சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் பல்ஹீத் உள்ளிட்ட இருவரும் சமைத்துள்ளார்கள்.
இந்நிலையில் உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் உணவை உட்கொண்ட 47 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் உணர்வை சாப்பிடவில்லை. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளிக்கு ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மேலும் இது குறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று மாணவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல் கூறினார். இதையடுத்து சமையலறை லட்சுமி மற்றும் உதவியாளர் பல்ஹித் உள்ளிட்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு விட்டார். 6 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தற்பொழுது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.