Categories
தேசிய செய்திகள்

பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்?…. பிரதமர் மோடி கலகலப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்தில் பல் மருத்துவராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய மருத்துவர் நவ்ஜோத் சிமியுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அப்போது, அவரைப் பாராட்டிய பிரதமர் மோடி தமது கேள்வியால் கலகலப்பை ஏற்படுத்தினார். வார்த்தைகளில் விளையாடும் திறனைப் பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்தியில் அவரிடம் பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் கேட்டவுடன் சிமி புன்னகையுடன் பதிலளித்தார்.
புத்திசாலித்தனமாக மக்களின் வலியைத் தீர்க்கும் பணி காவல்துறை பணி என்பதால் தேர்வு செய்ததாகக் கூறினார். மேலும் நான் நீண்ட காலமாக சிவில் சர்வீசஸில் வேலை செய்கிறேன் … ஒரு மருத்துவரின் பணி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் கடமை மக்களின் வலியைப் போக்க வேண்டும், எனவே இது சேவையில் பணியாற்ற ஒரு பெரிய தளம் என்று நான் நினைத்தேன் என்று கூறினார்.

Categories

Tech |