உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பை தடுக்க உதவுகிறது. நுரையீரல், புராஸ்டேட், மார்பகம், வயிறு மற்றும் குடல் ஆகிய உறுப்புகளில் வரும் வரும் புற்றுநோயை தடுக்கிறது. மூளையில் புற்று நோயை தடுக்கிறது. பெண்களுக்கு இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது. சிறந்த ஆன்டி பயோடிக் ஆக இருப்பதால் நோய்களை தடுக்கிறது. கல்லீரல் சேதத்தை தடுக்கிறது. பல் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இவ்வாறு பல்வலி முதல் புற்றுநோய் வரை அனைத்து நோய்களுக்கும் பூண்டு அருமருந்தாக அமைகிறது.