சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1343 வாகன ஓட்டிகளிடமிருந்து 23 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 39 ஓட்டுநர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Categories