தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் 5 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 41 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் பின் காவல்துறையினர் ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.
இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு கோவை மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.