டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக் குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் ஆகிய பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து இருக்கிறது. இவற்றில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்து உள்ளார். சென்ற 2019 ஆம் வருடமே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய சூழ்நிலையில் அண்மையில்தான் நிறைவடைந்தது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. அண்மையில் ரசிகர்ஒருவர் கோப்ரா திரைப்படம் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, “கோப்ரா” படத்தை மே 26ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் 2ஆம் பாடலான அதீரா எனும் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் விக்ரம் பல்வேறு தோற்றத்திலுள்ள மேக்கிங் வீடியோ இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகிய இந்த பாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.