பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது.
இதில் தி.மு.க. பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அய்யனார், மக்கள் நீதி மையம் சார்பில் செங்குட்டுவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.