அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காஞ்சனா மேரி தலைமை தாங்கினார்.
இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் பாசில், மாவட்ட தலைவர் ராம ஜெயம், மாவட்ட பொருளாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.