அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார்.
இவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், தாலுகா பொருளாளர் ராஜீவ், மாவட்ட பொருளாளர் சுபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.