ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் 4 தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகளை செயல்படுத்த கூடாது, ஆட்டோ மற்றும் கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய சங்கங்களை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைத்தலைவர் தேவதாஸ், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது