கூட்டுறவு ஊழிய சங்கதினர் சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 44 தொழிலாளர்கள் நல சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்தும், 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.