தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, துணை தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய துணைத்தலைவர் வள்ளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.