Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் மற்றும் அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழக அரசு ஊழியளர்களுக்கு வழங்கும் 31 சதவீத அகவிலைப்படியை கூட்டுறவு நியாய விலை கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

Categories

Tech |