Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… பாஜகவினர் காத்திருப்பு போராட்டம்… ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 50 வயது மேற்பட்டவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பாஜகவின் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |