போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழகம் முன்பாக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மண்டலத் தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் அமர்ந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதனையடுத்து திருச்சி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்பிறகு போக்குவரத்து பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் செய்யது இப்ராஹிம், மாவட்ட துணைத்தலைவர் நசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.