மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரணி, போரூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் 3 வருடங்களாக வழங்கப்படாத சி.பி.எஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், பணிப்பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகி மகாலிங்கம், பழனிவேல், கருணாகரன், ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் நீதிமாணிக்கம், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.