மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சத்திரப்பட்டி மற்றும் சேத்தூரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.