பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவரான அரசு தாயுமானவன் தலைமை தாங்கியுள்ளார். இதற்குமாவட்ட செயலாளரான தமிழ்மணி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போராட்டம் பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், உபா எனும் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்ட எல்லையற்ற அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டியும், சென்னையில் இயங்கிவரும் மத்திய அரசின் என்.ஐ.ஏ அலுவலகத்தை மூட வேண்டியும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளரான அமிர்தலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளரான கந்தசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளரான கலியபெருமாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷங்கள் எழுப்பி வந்துள்ளனர்.