Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மருத்துவ பணியாளர்களின் தொடர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மருத்துவத்துறை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வினோஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில்  பணிபுரிந்த தற்காலிக செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மேலும் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் கவிதா, எம். பி. நாகை செல்வராஜ், டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் காளிதாசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சந்திரசேகர ஆசாத், அரசு பணியாளர் சங்க நிர்வாகி சத்தியமூர்த்தி, பூபதி, ராஜா, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |