மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் , தாலுகா கமிட்டி உறுப்பினர் மலைராஜ், பரிசுத்தமங்களசாமி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.