பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் அரசமூடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தனியார் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், அண்ணாதுரை, சேகர், லீமா ரோஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.