Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கை …. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம் … விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 31% அகவிலைப்படி  வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 73 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.இந்த போராட்டத்தில் மண்டல கவுரவ தலைவர் கெங்குராஜ், துணைப் பொதுச் செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |