Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. 30 கி.மீ மைலேஜ் வழங்கும் Maruti suzuki நிறுவனத்தின் கார்….

Maruti suzuki நிறுவனம் இந்தியாவில் ஸ்விப்ட் S-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை Maruti suzuki subscribe முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கலாம். இதற்கான கட்டணம் 16 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Maruti suzuki புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Maruti suzuki ஸ்விப்ட் S-CNG மாடலில் 1.2L K சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை, 76 ஹெச்பி பவர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த கார் கிலோவுக்கு 30.90 கி.மீ வரையிலான மைலேஜ் வழங்கும் என Maruti suzuki தெரிவித்து இருக்கிறது. இதில் இண்டெலிஜண்ட் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் டூயல் இண்டிபெண்டண்ட் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக CNG-ஐ சுற்றி எந்த சேதமும் ஏற்படுத்தாத வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன.

Categories

Tech |