ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் குறித்த முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
பிரபல நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட் போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் ஒன்பிளஸ் 7 -ஐ ஒப்பிடும் போது 7டியில் கேமரா 48MP + 16MP + 12MPயில் வட்டமாகவும், நேர்த்தியாகவும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய ஒவ்வொரு பிட்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான ஸ்மார்ட் போன்களை ஒப்போடும்போது இதனுடைய நாட்ச் சிறியதாக காணப்படுகிறது. இதனையடுத்து மேட் பூச்சு கொண்டுள்ள 7டி, 190 கிராம் எடை கொண்டதாகும்.
இதனுடைய 6.55 இன்ச் கொண்ட இந்த டிஸ்பிளே HDR10+ வண்ணங்களையும் ஆதரிக்கிறது. மேலும் ஸ்பிளேவில் உள்ள இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் முன்பைவிட வேகமாக செயல்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விட 7டி 4% செயல்திறன் அதிகமாகவும், ஜி.பீ.யூ கிராபிக்ஸ் செயல்திறன் 14% அளவிலும் உள்ளது. இந்த 7டி செல்போன் ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 டைப் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒஸ் 10-ஐயும் கொண்டுள்ளது.
இதனுடைய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தெளிவான மற்றும் போதுமான சத்தத்தை அளிக்கிறது. குறிப்பாக ஒன்பிளஸ் 7டி 3800 எம்ஏஎச் பேட்டரியை கொண்டது. இதனால் ஒரு நாள் முழுவதும் உபயோகப்படுத்த முடிகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த செல்போன் ஒன்பிளஸ் 7 ப்ரோவை ஒப்பிடும்போது 18% வேகமாக சார்ஜ் ஆகிறது. இந்நிலையில் 7டி செல்போனை பொறுத்தவரை இதனுடைய வடிவமைப்பு, கேமரா, செயல்திறன் ஆகியவை பெரும் மேம்பாடுகளுடன் உள்ளது.