பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்தநிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லீஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி பன வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை பற்றி பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில் கிராம பொருளாதார உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சி தூன்டுவதற்கு தேவையான திறன்களை நாம் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் பிரித்தானிய பிரதமர் தெளிவுபடுத்தது போல் பொருளாதார ரீதியாக செயலாற்ற நிலையில் உள்ளவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். இந்த சூழலில் வெளியாகியுள்ள அறிக்கையின் அடிப்படையில் அதிகாரத்துவத்தை தவிர்த்து நாட்டின் பிற வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டு ஊழியர்களின் நிரப்புவதற்கும் அரசாங்கத்தின் பற்றாக்குறை தொழில்களில் பட்டியலை விரிவுபடுத்துவதற்கும் லிஸ் ட்ரஸ் தயாராக இருக்கலாம் என தகவல் தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் உள்ள வணிகர்களால் குரல் கொடுக்கப்படும் முக்கிய கவலைளுகள் ஒன்று தொழிலாளர் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.