பனங்கிழங்கினால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதைப் பார்ப்போம். பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து கொண்டது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை தீரும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். அதேபோல் கர்பப்பை பலவீனமாக இருப்பவர்கள் பனங்கிழங்கு பொடியினை பாலுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். இப்படி செய்யும் போது கர்ப்பப்பை வலுப்பெறும்.
இது அதிக இரும்புச் சத்து நிறைந்தது. இதனால் இரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும்.